"புரொடக்‌ஷன் கம்பெனி, வெப்சீரிஸ். இதான் சாரோட கனவு!"- எஸ்.பி.ஜனநாதன் நினைவுகள் பகிரும் காதல் சரண்யா

சமூக மாற்றத்துக்கான படங்களை எடுத்த இயக்குநர்களில் முக்கியமானவர் எஸ்.பி.ஜனநாதன். ‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ போன்ற படங்களை எடுத்தவர். ‘லாபம்’ படத்தின் எடிட்டிங் வேலைகளில் இருந்தவர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் கடந்த வருடம் இறந்தார்.

இன்று (மார்ச் 14) அவரது நினைவுதினம். அவரது நினைவலைகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் நடிகை ‘காதல்’ சரண்யா. இவர் எஸ்.பி.ஜனநாதனின் ‘பேராண்மை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். தவிர, ‘லாபம்’ படத்திலும் பணியாற்றியிருக்கிறார்.

எஸ்.பி.ஜனநாதன்

எஸ்.பி.ஜனநாதன் சார் இறந்து மூணு மாசத்துக்கு என்னால எதுவும் பண்ண முடியல. அப்புறம், அதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்தேன். ஜனா சார் உயிரோட இருக்குறப்போ, ‘வாழ்க்கையில யார் இருந்தாலும், இல்லைன்னாலும் life just moves on’னு சொல்லிட்டு இருப்பார். கிட்டதட்ட அஞ்சு வருஷம் எங்கேயும் வெளியே பெருசா போகமா இருந்தேன். வெளியே வந்து நான் வொர்க் பண்ணணும்னு ஜனா சார் விருப்பட்டார்.

‘லாபம்’ படத்துல வேலைப் பார்த்தேன். அவர்கூட தொடர்ந்து வேலைப் பார்த்த மூணு மாசத்துல இறந்துட்டார். எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. படத்தோட கடைசி நாள் ஷூட்டிங் முன்னாடி தோள் மேல கை போட்டு, ‘புரொடக்‌ஷன் கம்பெனி ஆரம்பிக்கணும், நிறைய வெப்சீரிஸ் எடுக்கணும்னு’னார். கேமரா தொழில்நுட்பம் தொடர்பான நிறைய புதிய விஷயங்களை படத்துல பண்ணணும்னு பேசிக்கிட்டு இருப்பார்.

காதல் சரண்யா

பைனரி புரொடக்‌ஷன்ஸ்னு நிறுவனத்துக்கு பெயர் செலக்ட் பண்ணியிருந்தார். ஆனா, இதெல்லாம் நடக்காம இறந்துட்டார். கடந்த மூன்று நாள்களாக ஜனா சார் மருத்துவமனையில உடல் இளைச்சு, மெலிஞ்சு இருந்ததுதான் ஞாபகத்துக்கு வந்துட்டு இருக்குது. மனசே கஷ்டமா இருந்தது. நம்ம வாழ்க்கை நம்ம கையிலனு சொல்லுவார். அவரோட வார்த்தைகள் கேட்டுக்கிட்டே இருக்கு. யார் இருந்தாலும் இல்லனாலும் நாம இருக்கணும்னு சொல்லுவார். அவர் உயிரோட இருந்திருந்தா பெரியளவுல ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சிருப்பார். அவரோட கனவுகளை நிறைவேற்றனும்னு முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.

விஜய் சேதுபதி சார்கூட ஜனா சார் எண்ணங்களைச் செயல்படுத்தணும்னு யோசிச்சுட்டுதான் இருக்கார். என்னோட நண்பர்கள்கூட சேர்ந்து டப்பிங் ஸ்டூடியோ தொடங்கியிருந்தேன். அப்போ ஜனா சார் போட்டோ வெச்சுதான் ஆரம்பிச்சோம். சினிமாவுல இருக்குற 24 துறைகளின் தொழிலாளர்கள் நிறைய பேரின் வாழ்வதாரத்துக்கு உதவணும்னு ஆசைப்பட்டார்”, என்றவரிடம் விஜய் சேதுபதியை சந்தித்து பேசினீர்களா எனக் கேட்டோம்.

எஸ்.பி.ஜனநாதன்

“ஜனநாதன் சார் இறந்து மூணு மாசத்துக்கு பிறகு போய் பார்த்தேன். ‘பொருளாதாரா ரீதியா ஏதாவது உதவி தேவைப்படுதானு’ கேட்டார். அப்படிப்பட்ட உதவிகள் ஜனா சாரே எனக்கு பண்ணியிருக்கார். அதனால ‘இல்ல சார்’னு சொன்னேன். ‘ஏதாவது தேவைப்பட்டா எப்போ வேணுனாலும் போன் பண்ணுங்கனு’ சொன்னார். ஜனா சார்கூட இருந்ததுனால யார்கிட்டயும் எதுவும் கேட்கவும் தோணல. எப்போவும் ஜனா சாரின் நினைவுகள் மனசுல இருக்கும்” எனச் சொல்லி முடித்தார் ‘காதல்’ சரண்யா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.