மருமகள் மீதான கோபத்தில் இரண்டு வயது பேத்தி சாவுக்கு மாமியார் காரணமானார்| Dinamalar

துமகூரு : மருமகள் மீதான கோபத்தில், இரண்டு வயது பேத்தி சாவுக்கு மாமியார் காரணமானார்.துமகூரின் குனிகல் அருகே உள்ள சாசலு கிராமத்தை சேர்ந்தவர் புட்டராஜு, 35. இவரது மனைவி சிக்கம்மா, 30.இவர்களுக்கு திரிஷா, 3 என்ற மகள் இருந்தார். இவர் சில நாட்களுக்கு முன் ரத்த வாந்தி எடுத்தார்.

இதையடுத்து பெற்றோர், மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தையை நாய் அல்லது பூனை கடித்திருக்கலாம் என கூறினர். அவரது உடல் நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்தது.இந்த வேளையில், புட்டராஜு தாயார் ஜெயம்மா, ஒரு மாதத்துக்கு முன் குழந்தையை வெறிநாய் கடித்ததாக கூறினார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தது.

சிக்கம்மாவை, புட்டராஜு சில ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் ஜெயம்மாவுக்கு விருப்பம் இல்லை. மருமகளுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். எனவே மருமகள் மீதான கோபத்தில், பேத்தியை நாய் கடித்த விஷயத்தைமறைத்து விட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து குனிகல் போலீசில், தாய் மீது மகன் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.