முருகனுக்கு பரோல் வழங்கிடக்கோரி அவரது மாமியார் மனு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனை பரோலில் விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முருகனின் மாமியார் பத்மா தாக்கல் செய்திருக்கும் மனுவில், தனது மகள் நளினி பரோலில் இருப்பதால், மருமகன் முருகனுக்கும் விடுப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். நளினி தனது கணவருக்கு விடுப்பு வழங்கும்படி மனு அளித்தும் சிறைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பத்மா குறிப்பிட்டுள்ளார்.
மகள் திருமணத்திற்கு செல்ல பரோல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது முருகன்  பேட்டி||Murugan interviewed believes that parole will be available for  daughter's marriage -DailyThanthi
உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் முருகனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால், 30 நாட்கள் விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என பத்மா கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.