லெஜண்ட் சரவணாவுடன் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை…!

லெஜெண்ட்
சரவணன்
நடித்து வரும் புதிய படத்தில் நடிகை லட்சுமி ராய் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.தமிழ்நாட்டின் பிரபல தொழிலதிபரான லெஜெண்ட் சரவணன் தற்போது சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

விசில் படத்தை இயக்கிய இயக்குனர்கள் ஜேடி
ஜெர்ரி
இந்தப் படத்தை இயக்கி வருகின்றனர். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை
ஊர்வசி ரட்டேலா
கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மயில்சாமி, பிரபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

மறுமணத்துக்கு ரெடி.. ஆனா, மூனு கண்டிஷன் இருக்கு: டி. இமான்..!

மறைந்த நடிகர் விவேக்-ம் இந்தப் படத்தில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஹாரிஸ் ஜெயராஜ்
இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். படத்திற்கு லெஜன்ட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை லட்சுமி ராய் இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“இது ஒரு கவர்ச்சியான, நாட்டுப்புற குத்து பாடல், எனவே இந்தப் பாடலுக்கு லட்சுமி ராய் பொருத்தமாக இருப்பார் என்று அவரை அணுகிய போது அவரும் உடனே சம்மதம் தெரிவித்துள்ளார்.
ராஜு சுந்தரம்
மாஸ்டர் இந்தப் பாடலுக்கு கோரியாகிராப் செய்துள்ளார்.

இந்தப் பாடலுக்காக லட்சுமி ராய் தொடர்ந்து ஆறு நாட்கள் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். மிகவும் எனர்ஜிடிக் மற்றும் கடினமான டான்ஸ் ஸ்டெப் பாடலும் கூட. லட்சுமி ராய் நடனமாடியுள்ள குத்து பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. எனவே இந்தப் பாடலுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.