ஆசை பட பாணியில் மனைவியை கொன்ற பாரின் ரிட்டன் கணவர்..! காதல் வண்டாக மாறிய பெண்ணால் விபரீதம்

நாகர்கோவில் அருகே ஆசை சினிமா பட பாணியில் மனைவியின் தலையில் பிளாஸ்டிக் கவர் சுற்றி கொலை செய்த கணவர், தானும் உயிரை மாய்த்துக் கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேந்தவர் ஜோஸ். மீனவரான இவர் வெளிநாட்டில் தங்கி ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்கும் பணி செய்து வந்தார்.

கடந்த டிசம்பம் மாதம் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய ஜோஸ், குளச்சலில் இருந்து கோட்டாரு பகுதியில் வாடகைக்கு வீடு பார்த்து தனது மனைவி வனஜா மற்றும் இரு மகள்களுடன் இடம் பெயர்ந்தார்.

அக்கம் பக்கத்தில் பெரிய பழக்கம் இல்லாத நிலையில், கடந்த இரு தினங்களாக ஜோஸ் குடும்பத்தினர் வசித்து வந்த வீடு பூட்டியே கிடந்துள்ளது.

இந்த நிலையில் திங்கட்கிழமை காலையில் வனஜாவின் மூத்த மகள் கழுத்தில் காயத்துடன் வீட்டில் இருந்து அலறியபடியே வெளியே ஓடி வந்து தனது தந்தை தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி உள்ளார்.

அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்தபோது, ஜோஸ் தூக்கிட்டு சடலமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவருக்கு அருகில் வாயில் துணியை வைத்து அடைத்து கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் மற்றொரு மகள் சோர்வாக காணப்பட்டார்.

உடனடியாக அந்த சிறுமியை மீட்டு, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரிடம், கட்டிலுக்கு அடியில் தங்களது தாயின் சடலம் இருப்பதாக கூறவே, போலீசார் அழுகிய நிலையில் காணப்பட்ட வனஜாவின் சடலத்தை மீட்டனர். ஜோஸ் மற்றும் வனஜா சடலங்களை பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரோடு மீட்கப்பட்ட அந்த இரு சிறுமிகளிடம் விசாரித்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தது.

8 வருடங்களுக்கு முன்பு ஜோஸ் , ஏற்கனவே திருமணமாகி இரு பெண் குழந்தைகளின் தாயான வனஜா என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். வனஜாவுக்கு இது 2ஆவது திருமணம். மனைவி குழந்தைகளை வசதியாக வாழவைக்க வேண்டும் என்று ஜோஸ், வெளிநாட்டில் தங்கி மீன்பிடித்து குடும்பத்திற்கு பணம் அனுப்பிய நிலையில் , உள்ளூர் இளைஞருடன் வனஜாவுக்கு 3 வதாக காதல் மலர்ந்துள்ளது.

இதனை அறிந்து கண்டித்த ஜோஸ், மனைவிக்காக வீட்டையும் வேறு இடத்துக்கு மாற்றி உள்ளார். அதன் பின்னரும் அடங்காத வனஜா, செல்போன் மூலம் காதலுக்கு உயிரூட்டி உள்ளார்.

இதனை கண்டுபிடித்த ஜோஸ், ஆசை பட பாணியில் தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி, சனிக்கிழமை இரு மகள்களும் பள்ளிக்குச் சென்ற நிலையில் மனைவிக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர் மயக்கியதும் கை,கால்களை கட்டியதோடு, வனஜாவின் தலையை பிளாஸ்டிக் பையால் இறுக்கமாக கட்டி அவரை கொலை செய்து, கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளான். பள்ளி முடிந்து வீடுதிரும்பிய இரு மகள்களும் அம்மா எங்கே.? என்று கேட்டு ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்ததால் அவர்களின் வாயில் துணியை திணித்து, கை,கால்களை கட்டி வீட்டுக்குள் அடைத்து வைத்துள்ளார்.

வனஜாவின் சடலம் அழுகி துர்நாற்றம் வீசிய நிலையில் மகள்களையும் கொலைசெய்து விட்டு , தற்கொலை செய்து கொள்ள ஜோஸ் முடிவு செய்துள்ளார். ஆனால் மூத்த மகள் கழுத்தில் கத்தியை வைத்த ஜோஸ், தனது மகள்கள் மீது இரக்கப்பட்டு, அவர்களை அப்படியே விட்டு விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

தவறான சகவாசம், குடும்பத்தின் குலநாசம் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சி..!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.