இலங்கைக்கு இந்தியா கடனுதவி… எவ்வளவு டாலர்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்துவரும் சுற்றுலாத் துறை, கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் விளைவாக வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. இதனால் உணவு, பெட்ரோல், டீசல், மருந்து வகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்ாடு ஏற்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க உலக நாடுகளின் உதவியை இலங்கை நாடி வருகிறது. இதில் முக்கிய அம்சமாக இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவி பெறுவதை இறுதி செய்வதற்காக இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இன்று இந்தியா வரவுள்ளார்.

அனைத்து ராஜபக்சகளின் மூளைகளும் தோல்வி… எகிறி அடித்த எதிர்க்கட்சி எம்பி!

அவரது இரண்டு நாள் பயணத்தில் நாட்டின் எரிபொருள், உணவு மற்றும் மருந்து இறக்குமதிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை இந்தியாவிடம் கடனாக பெறுவது குறித்து
பசில் ராஜபக்சே
முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என்று மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பாசில் ராஜபக்சே பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இந்தியாவின் முதலீட்டு திட்டங்கள் குறித்து இருவரும் விவாத்தினர்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இலங்கை அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி பெறப்போவதாக இலங்கை ஏற்கெனவே அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.