உக்ரைன் போரில் லண்டன் கமெராமேன் உட்பட 2 பத்திரிகையாளர்கள் மரணம்


உக்ரைனில் தலைநகர் கீவ் அருகே ரஷ்யா நடத்திய தாக்குதலில் லண்டனிச் சேர்ந்ந்த ஃபாக்ஸ் நியூஸ் ஒளிப்பதிவாளர் மற்றும் பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர்.

தலைநகர் கீவ் அருகே Horenka-வில், உக்ரைனில் நடக்கும் போரைப் பற்றி செய்தி வெளியிடும் போது ரஷ்ய துருப்புக்கள் நடத்திய பீரங்கித் தாக்குதலால் அமெரிக்க செய்தி நிறுவனமான Fox News ஒளிப்பதிவாளர் கொல்லப்பட்டார். மேலும் நிருபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

உக்ரைனைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளரும் செய்தி தயாரிப்பாளாருமான Oleksandra Kuvshinova-Sasha (24) மற்றும் ஒளிப்பதிவாளர் Pierre Zakrzewski (55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒளிப்பதிவாளர் Pierre Zakrzewski ஒரு ஐரிஷ் குடிமகன் என்றும், அவர் பிரித்தானிய தலைநகர் லண்டனில் வசித்துவந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த குழுவில் Benjamin Hall (39) எனும் ஃபாக்ஸ் நியூஸ் நிருபருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Gallery

GallerySource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.