என்ன! இந்த வீடியோல இருக்கிறது பிரபல விஜய் டிவி நடிகையா? நம்பவே முடியல! நீங்களே பாருங்க!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. இதில், மலர்விழி வெற்றிவேல் வேடத்தில் நடித்த நடிகை பவித்ரா ஜனனிக்கு, இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் புகழையும், ரசிகர்களையும் தேடித் தந்தது.

இந்த சீரியலைத் தொடர்ந்து தற்போது பவித்ரா, தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் அபிநயா என்னும் கேரக்டரில் நடிக்கிறார். அதில் இவருக்கு ஜோடியாக சுந்தரி நீயும், சுந்தரன் நானும் சீரியல் புகழ் வினோத்பாபு நடிக்கிறார்.

விஜய் டிவியில் தினமும் மதியம் ஒளிபரப்பாகும் இந்த சீரியல், அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த சீரியல் ஹீரோயின் பவித்ரா ஜனனி’ சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது. இணையத்தில் எப்போதுமே  வழக்கமாக ஏதாவது ஒரு ஆப் டிரெண்டிங் ஆகும். சில நேரங்களில் வயதானவரை போல, அல்லது சில நேரங்களில் குழந்தையாவது போல எடிட்டிங் ஆப் டிரெண்டிங் ஆகும். அந்த சமயம் பலரும் தங்களின் புகைப்படங்களை அதேபோல எடிட் செய்து, இணையத்தில் பகிர்வார்கள்.

அதுபோல இப்போது ஜோஷ் ஆப்பில், ஒவ்வொருவரும், வெவ்வேறு நாட்டில் பிறந்தால், பார்க்க எப்படி இருப்பார்கள் என்ற எடிட் ஆப்ஷனை இப்போது அறிமுகம் செய்துள்ளது. அதில் பலரும் தங்களது படங்களுடன் எடிட் செய்து’ ஓ அப்போ நாம இந்த நாட்டுல பிறந்தா பார்க்க இப்படித்தான் இருப்போமோ என பகிர்ந்து, மகிழ்ந்து வருகின்றனர்.

அந்தவகையில்’ பவித்ராவும்’ தன் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பவித்ராவுக்கென ரசிகர் பக்கங்கள் உள்ளனர். அதில் யாரோ இப்படி ஒரு வீடியோவை வெளியிட’ அதைப்பார்த்து மகிழ்ந்த பவித்ரா ஜனனி தன்னுடைய பக்கத்திலும் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் சீனா, கஜகஸ்தான், ஜப்பான், ஜெர்மனி, தாய்லாந்து ஆகிய நாடுகளில் பவித்ரா பிறந்தால் பார்க்க எப்படி இருப்பார் என்பது போல அந்த வீடியோவில் உள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் பலரும்’ கியூட் அழகா இருக்கீங்க என பவித்ராவை வாழ்த்தி வருகின்றனர். இதோ அந்த வீடியோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.