தேர்தல் தோல்வி எதிரொலி; 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய சோனியா காந்தி உத்தரவு!

பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும் மற்ற 4 மாநிலங்களில் பாஜக-வும் வெற்றிபெற்றிருந்தன. காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட வெற்றிபெறவில்லை. பல இடங்களில் படுதோல்வியைச் சந்தித்திருந்தது.

காங்கிரஸின் இந்த வீழ்ச்சி குறித்து அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில், தற்போது அந்தக் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி 5 மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

காங்கிரஸ்

கட்சியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கையை காங்கிரஸ் தலைமை மேற்கொள்ளவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.