நாடு முழுவதும் காவல்துறையில் காலி பணியிடங்கள் எவ்வளவு? மத்திய அரசு பதில்

நாடு முழுவதும் காலியாக உள்ள காவல்துறை பணியிடங்கள் தொடர்பாக பெரம்பலூர் எம்.பி.யும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் தலைவருமான பாரிவேந்தர் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் புள்ளிவிவரப் பட்டியலுடன் பதிலளித்துள்ளார்.
நாடு முழுவதும் மொத்தம் 26 லட்சத்து 23 ஆயிரத்து 225 காவல்துறை பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 737 இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட காவலர் பணியிடங்கள் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 950 என்ற நிலையில், 12 ஆயிரத்து 205 காலிப் பணியிடங்கள் இருப்பதாக உள்துறை அளித்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.