ரோகித் சர்மாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரசிகர் – என்ன நடந்தது?ரோகித் சர்மா அடித்த சிக்ஸரால் ரசிகர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.இதில் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இப்போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பெங்களூரைச் சேர்ந்த 22 வயது ரசிகர் ஒருவர் டி கார்ப்பரேட் பாக்ஸ் பிரிவில் அமர்ந்து போட்டியை ரசித்து கொண்டிருந்தார். அப்போது இலங்கை வீரர் பெர்னாண்டோ வீசிய பந்தில் ரோகித் சர்மா அடித்த சிக்ஸர் ஒன்று ரசிகர்கள் நேராக அவரின் முகத்தில் பலமாக பட்டது. 

இதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.அதில் அந்த நபரின் மூக்கு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளாதாகவும், மேலும் தையல் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.