"வாடகை கட்ட தவறினால் வயர்களை அறுத்துவிடுவோம்" – சென்னை மாநகராட்சி விடுத்த எச்சரிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கேபிள் டிவி மற்றும் இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தடவாடகையை உடனடியாக செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெரு விளக்கு கம்பங்களில் உள்ள உபயோகமற்ற மற்றும் தடவாடகை செலுத்தாத கேபிள் டிவி மற்றும் இன்டர்நெட் நிறுவனங்களின் 75 கிலோ மீட்டர் நீள வயர்கள் அகற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உடனடியாக தடவாடகை செலுத்தாத நிறுவனங்களின் வயர்களை அகற்றுதல் மற்றும் ஒழுங்குபடுத்தும் பணிகள் தொடரும் என்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.