விவாகரத்தான கையோடு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கிய இயக்குநர் பாலா… வெளியான ஹாட் தகவல்!

தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே படங்களை கொடுத்திருந்தாலும் ஒவ்வொரு படம் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கிறது.

இந்நிலையில் இயக்குநர் பாலாவும் அவரது மனைவியும் கடந்த 5 ஆம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் சட்டப்படி விவாகரத்து பெற்றனர். கடந்த 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த நிலையில் முறைப்படி விவாகரத்து பெற்றுள்ளனர்.

பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்க வேண்டாமா? அஜித் ரசிகர்களை விடாமல் சீண்டும் ப்ளூ சட்டை!

அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே அடுத்தக்கட்டட நடவடிக்கையில் இறங்கியுள்ளார்
இயக்குநர் பாலா
. அதாவது நடிகர் சூர்யாவை வைத்து இயக்கும் படத்தின் வேலைகளை ஆரம்பித்துள்ளார். இந்தப் படத்தில்
சூர்யா
இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

மேலும் ஒரு சூர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி ஜோதிகாவும் மற்றொரு சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை கிரித்தி ஷெட்டியும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளுக்கு நாள் கூடும் அழகு… செல்வராகவனின் மாஜி மனைவி போட்டோஸ்!

ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதியில் இதற்கான படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 3 முதல் 4 மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மனைவியையும் மகளையும் பிரிந்து தனிமையில் வாடும் பாலா வேலையில் தனது கவனத்தை திருப்ப விரும்புவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனக்கு நம்பிக்கையே இல்ல..என் மனச மாத்தீட்டாங்க – மதன் கார்க்கி Open Talk!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.