“நான்தான் கூறினேன்; கோபத்தை என்னிடம் காட்டுங்கள்”- பிரதமர் மோடி பேசியது என்ன?

வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அதை தவிர்க்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதாவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பாரதிய ஜனதா நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “வாரிசு அரசியல் என்பது காங்கிரஸ் அல்லது வேறு ஏதேனும் ஒரு கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டு அல்ல. மாறாக அது ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பிற்கே எதிரானது. அதேபோல வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு எதிரானது. அது லஞ்ச ஊழலை ஊக்குவிக்கும்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே, அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் பாஜக எம்பிக்கள் பலரின் வாரிசுகள் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. இதற்காக அந்த எம்.பி.க்கள் யாரேனும் அதிருப்தியில் இருந்தால், அவர்கள் அந்த கோபத்தை என்னிடம்தான் காட்டவேண்டும். ஏனெனில் வாரிசுகளுக்கு வாய்ப்பு தரக் கூடாது எனக் கூறியது நான்தான்” என்று தெரிவித்தார்.
சமீபத்திய செய்தி: பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமாSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.