பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள்… விஜய் பாடிய ‘ஜாலி ஓ ஜிம்கானா’… மார்ச் 19 வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் பீஸ்ட்.

அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் சிங்கிள் ‘அரபிக் குத்து’ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

‘ஜாலி ஓ ஜிம்கானா’ எனும் இதன் இரண்டாவது சிங்கிள் பாடல் மார்ச் 19 வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

மார்ச் 19 வெளியாக இருக்கும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ பாடலை விஜய் பாடியிருப்பதால் ரசிகர்களிடையே ‘அரபிக் குத்து’ ஏற்படுத்தியதை விட அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.