புனீத் ராஜ்குமார் ரியல் ஹீரோ: கதறி அழுத பிரியா ஆனந்த்..!

கன்னட சூப்பர் ஸ்டாரான
புனீத் ராஜ்குமார்
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி காலமானார். கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த புனீத் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

புனீத்தின் திடீர் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. இவர் கடைசியாக நடித்த ‘
ஜேம்ஸ்
‘ படம் வரும் 17 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்தப் படம் சர்வதேச அளவில் 4000 திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தில் புனீத் சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக
பிரியா ஆனந்த்
நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் புனீத் குறித்து பேசிய பிரியா ஆனந்த், புனீத் ராஜ்குமார் ரீலில் மட்டுமின்றி ரியலாகவும் மிகச்சிறந்த ஹீரோ தான். அவருடன் முதன்முதலில் நடித்தபோது எனக்கு கன்னட வார்த்தைகளை, கோயில்களை மற்றும் உணவுகளை அறிமுகப்படுத்தினார். அவ்வளவு பெரிய ஹீரோ இவ்வளவு இயல்பாக, அன்பாக பழகியது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.

தன்னை சந்திப்பவர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை புனீத் ஏற்படுத்திவிடுவார். தற்போது ஜேம்ஸ் படத்தில் அவர் தனது ஆதிக்கத்தை மிகப்பெரிய அளவில் செய்துள்ளார். அனைவரும் விரும்பப்படும் அளவில் இந்தப் படம் கண்டிப்பாக இருக்கும். ரசிகர்களுக்கு இந்தப்படம் மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார் பிரியா ஆனந்த்.

புதுக்காதலுக்கு தேதி குறிச்சாச்சு: குட் நியூஸ் சொன்ன ஐஸ்வர்யாவை வாழ்த்தும் ரசிகர்கள்..!

வெற்றியை தலைக்குள் ஏற்றிக் கொள்ளாமல் மற்றவர்களிடம் எப்படி இயல்பாக இருபபது என்பதை அவரிடம் கற்றுக் கொள்ளலாம். அவர் சிறப்பான தந்தையாகவும், கணவனாகவும், சிறந்த மகனாகவும் இருந்தார். எங்கு பார்த்தாலும் அவர் என்னை பார்த்து சிரிப்பதாக தோன்றுவதாகவும், அவருடைய சிரிப்பு அவருடைய இதயத்திலிருந்து வெளிவரும் என்றும் பிரியா ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேட்டியில் புனீத் குறித்து பேசும் போது மனம் உடைந்து கண் கலங்கி அழுதுள்ளார் பிரியா ஆனந்த். இரண்டாவது முறையாக இந்தப்படத்தில் புனீத் ஜோடியாக நடித்துள்ளார் பிரியா ஆனந்த். மேலும் சரத்குமார், ஆதித்யா மேனன் ஆகியோரும் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“எதற்கும் துணிந்தவன்” படம் எப்படி இருக்கு?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.