பேடிஎம், போன்பே-வுக்கு தலைவலி கொடுக்க வருகிறது டாடா.. இனி ஆட்டம் அதிரடி தான்..!

இந்தியாவில் வேகமாக வளரும் மிக முக்கியமான துறைகளில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை துறை மிக முக்கியமானது. இத்துறையில் ஏற்கனவே பேடிஎம், போன்பே, கூகுள் பே, அமேசான் பே எனப் பல நிறுவனங்கள் இருக்கும் நிலையில் டாடா குழுமம் இத்துறையில் புதிதாக இறங்குவதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஏற்கனவே குழாயடி சண்டையில் வாடிக்கையாளர்களைப் பிரித்துக்கொண்டு இருக்கும் நிறுவனங்கள் டாடா வருகையின் மூலம் போட்டும் இன்னும் அதிகரிக்க உள்ளது.

700 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டியின் நிலவரம் என்ன.. முதலீட்டாளர்கள் ஹேப்பி!

டாடா குழுமம்

டாடா குழுமம்

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான டாடா கடந்த 5 வருடத்தில் டிஜிட்டல் வர்த்தகத் துறையில் அதிகப்படியான வர்த்தகத்தை உருவாக்கி சூப்பர் ஆப் உருவாக்கி இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது. இந்த வேளையில் டிஜிட்டல் வர்த்தகச் சந்தையின் மிக முக்கியமானதாகக் கருதப்படும் டிஜிட்டல் பேமெண்ட் துறையில் டாடா குழுமம் இறங்க உள்ளது.

டாடா யூபிஐ செயலி

டாடா யூபிஐ செயலி

சந்திரசேகரன் தலைமையில் டாடா குழுமத்தின் டிஜிட்டல் வர்த்தகப் பிரிவு மிகவும் குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் UPI தளத்தின் உதவியுடன் பேமெண்ட் சேவையை அளிக்க NPCI அமைப்பிடம் ஒப்புதல் பெற டாடா குழுமம் காத்துக்கொண்டு இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி உடன் கூட்டணி
 

ஐசிஐசிஐ வங்கி உடன் கூட்டணி

டாடா குழுமத்தின் டிஜிட்டல் வர்த்தகத்திற்குப் புதிய சக்தியை கொடுக்கப்போகும் ஒரு சேவையாகப் பார்க்கப்படும் இந்த டிஜிட்டல் பேமெண்ட்-யை உருவாக்க டாடா டிஜிட்டல் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கி-யின் உதவியைப் பெற உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

போன்பே, கூகுள் பே

போன்பே, கூகுள் பே

போன்பே, கூகுள் பே நிறுவனங்களும் வங்கிகளின் உதவியுடன் தான் யூபிஐ பேமெண்ட் சேவையை அளித்து வருகிறது. இதே வழியை டாடா-வும் பின்பற்றுகிறது. உதாரணமாகக் கூகுள் பே இந்தியாவில் தனது டிஜிட்டல் பேமெண்ட் சேவையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கியின் உதவிகள் வாயிலாகவே அளிக்கிறது.

யூபிஐ செயலி, சூப்பர் ஆப்

யூபிஐ செயலி, சூப்பர் ஆப்

தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி டாடா குழுமம் தனது புதிய யூபிஐ செயலி மற்றும் சூப்பர் ஆப் டாடா நீரு-வை இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத துவக்கத்திற்குள் அறிமுகம் செய்ய உள்ளது.

ஐபிஎல்

ஐபிஎல்

இதற்கு முக்கியக் காரணம் ஐபிஎல் போட்டிகள் துவங்க உள்ள நிலையில் டாடா ஏற்கனவே டைட்டில் ஸ்பான்சர்-ஐ கைப்பற்றியுள்ள நிலையில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க டாடா ஐபிஎல் போட்டியின் போது அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata to introduce New UPI APP entering into biggest internet economy race

Tata to introduce New UPI APP entering into biggest internet economy race பேடிஎம், போன்பே-வுக்கு தலைவலி கொடுக்க வருகிறது டாடா.. இனி ஆட்டம் அதிரடி தான்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.