வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு.. சீர்வரிசையுடன் சிறப்பித்த குடும்பத்தினர்..!

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் ஒரு குடும்பத்தினர் தங்களது வளர்ப்பு பெண்நாய் 9 மாதங்கள் கர்ப்பம் தரித்திருந்த நிலையில் அதற்கு வளைகாப்பு நடத்தி உறவினர்களுக்கு விருந்து வைத்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்டூடியோ கடை நடத்தி வரும் நடராஜன் என்பவர் தனது வீட்டில் பொமேரியன் வகையை சேர்ந்த 2 பெண் நாய்களை வளர்த்து வருகிறார். அதில் சாரா என்ற நாய் கர்ப்பம் தரித்து 9 மாதங்கள் ஆன நிலையில் அதற்கு வளைகாப்பு நடத்த குடும்பத்தார் ஒரு சேர முடிவெடுத்தனர். இதனை முன்னிட்டு பிரத்யேக பத்திரிகை ஒன்றையும் அச்சிட்டு தங்கள் உறவினர்களுக்கு கொடுத்தனர்.

கடந்த 13-ம் தேதி திட்டமிட்டபடி சாராவுக்கு வளைகாப்பு நடத்தினர். சாராவை நாற்காலியில் அமரவைத்து மஞ்சள், குங்குமம் வைத்து வளையல் மாட்டி ஒரு கர்ப்பிணிப்பெண்ணுக்கு நடைபெறும் வளைகாப்பு நிகழ்ச்சியை போலவே செய்திருந்தனர்.

5 விதமான அறுசுவை உணவுகள் சாராவுக்கு பரிமாறப்பட்டதுடன், விழாவில் கலந்துகொண்ட பெண்கள் வெற்றிலை பாக்கு, தட்டு, கண்ணாடி,சீப்பு, தாலி கயிறு, மஞ்சள் ,குங்குமம் ஆகியவை அடங்கிய சீர்வரிசையையும் வழங்கினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.