ஸ்டைலாக ‘தம்’ அடிக்கும் நண்டு..! என்னமா புகை விடுது..! வைரல் வீடியோ!

பொதுவாக குரங்கு, கரடி எல்லாம் மனிதர்கள் அணைக்காமல் வீசிச் செல்லும் சிகரெட்டை புடிக்கும் வீடியோக்களை பார்த்திருப்போம். ஆனால் இங்கு நண்டு ஒன்று தம் அடிக்கும் வீடியோ ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 

மேலும் படிக்க | SVS 13 பைனரி நட்சத்திர கூட்டத்தைச் சுற்றி 3 கிரக அமைப்புகளின் உருவாக்கம் கண்டுபிடிப்பு!

35 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில் கடற்கரையில் நண்டு ஒன்று சிகரெட்டை அதன் கொடுக்கில் வைத்து புகைக்கிறது. அதன்பிறகு சிகரெட்டை வாயில் இருந்து எடுத்து புகை விடுகிறது. கேமரா வெளிச்சம் மேலே பட்டதும் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடுகிறது. இந்த வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன் வைரலானது என்றாலும், தற்போது மீண்டும் பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இது இந்தியாவில் எடுக்கப்பட்டது. எந்த ஊர் என்பது தெரியவில்லை.

மேலும் படிக்க | வெடிகுண்டை தண்ணீர் மூலம் செயலிழக்க வைத்த உக்ரைன் வீரர்கள்..! திக் திக் நிமிடங்கள்..!

Caution – புகைப்பிடிப்பது உடலுக்கு கேடு 

புகைப்பிடிப்பது மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், புகைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஆனால் புகைத்தபின் கீழே வீசும் சிகரெட்டை அணைத்தால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கலாம். சில சமயங்களில் இதை விலங்குகளும், கடற்கரையில் வாழும் உயிரினங்களும் உட்கொள்ளும் அபாயம் உள்ளதால் மனிதர்கள் திருந்த வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.