அவங்களே கன்ஃபியூஸ் ஆயிட்டாங்க போல… 10 நிமிடத்தில் காணாமல் போன ஐஸ்வர்யாவின் ஆல்பம்!

ஐஸ்வர்யா
ரஜினிகாந்த் காதல் கணவர் தனுஷை பிரிந்த பிறகு முதல் முறையாக காதல் ஆல்பம் ஒன்றை இயக்கி வந்தார்.
சஞ்சரி
, யாத்ரகாரகன்,
பயணி
, முசாஃபிர் ஆகிய பாடல்களை இயக்கினார்.

இந்த பாடல் ஒவ்வொன்றையும் தென்னிந்திய சினிமா பிரபலங்கள் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர். அதன்படி பயணி பாடலை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். இதேபோல் சஞ்சரி பாடலை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வெளியிட்டார்.

அல்லு அர்ஜூனும் அதே பாடலை வெளியிட்டு ஐஸ்வர்யாவுக்கும் அவரது டீம்முக்கும் வாழ்த்து தெரிவித்தார். மலையாள சூப்பர் ஸ்டாரானா மோகன் லால் யாத்ரகாரகன் பாடலை வெளியிட்டார். ஆனால் இந்த பாடல்கள் எதுவுமே அடுத்த 10 நிமிடங்களில் ப்ளே முடியாமல் போனது.

Aishwarya: இதுக்கா இவ்ளோ அலப்பறை? ஒன்னுக்கூட உருப்படியா இல்ல.. பயணியால் அப்செட்டான ஃபேன்ஸ்!

அனைத்து வீடியோக்களுமே Unavailable this Video is Private என்று வந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். வெளியான சற்று நேரத்திலேயே ஆல்பம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என கூறி நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை குவித்து வந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் வீடியோக்கள் திடீரென காணாமல் போனது பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ஏதோ குளறுபடி நடந்துள்ளதாக கூறி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் படம் வரட்டும்; மேடையில் SK20 பற்றி பேசிய சத்யராஜ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.