தமிழகச் சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழகச் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.

முற்பகல் பத்து மணிக்கு 2022 – 2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் குறித்த புத்தகம் இல்லாமல் இ பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யப்பட உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தபின் தாக்கல் செய்யப்படும் முதல் முழுமையான பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட் தாக்கலுக்குப் பின் அலுவல் ஆய்வுக்குழு கூடிப் பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.