பலசரக்கு ஏற்றுமதி மூலம் ஆக கூடிய வருமானம்

பலசரக்கு ஏற்றுமதி மூலம் வரலாற்றில் சமீப காலத்தில் பெறப்பட்ட ஆக கூடிய வருமானத்தை இலங்கை தனதாக்கிக் கொண்டுள்ளது.

இதற்கு அமைவாக 2021 ஆம் ஆண்டியில் மாத்திரம் பெறப்பட்ட வருமானம் ஒரு இலட்சத்து மூவாயிரம் மில்லியன் ரூபாய்களாகும். இதனை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 41 வீத அதிகரிப்பாகும். இதில் ஆக கூடிய வருமானம் கறுவா மூலம் பெறப்பட்டுள்ளது.

18இ814 மெட்றிக் தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் பெறப்பட்ட வருமானம் 45இ879 மில்லியன் ரூபா ஆகும். கடந்த வருடத்துடன் இதனை ஒப்பிடுகையில் 20 வீத அதிகரிப்பாவதுடன் மொத்த பலசரக்கு ஏற்றுமதி வருமானம் 45 வீதமாக அதிகரித்துள்ளது.

அமெரிக்கஇ மெக்சிகோஇ பேரு ஆகிய நாடுகளுக்கு கறுவா கூடுதலாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மிளகு ஏற்றுமதி மூலம் பெறப்பட்ட வருமானம் 22இ669 மில்லியன் ரூபாவாகும். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 148.3 வீத அதிகரிப்பாகும். 15இ959 மெற்றிக் தொன் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் கறுவாவிற்கு பெறுமதி சேர்க்கப்பட்டு இவ்வாறு சர்வதேச சந்தையில் வெற்றிகொள்ளப்பட்டிருப்பதாக ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனக்க லிந்தர தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் இலங்கை ஏற்றுமதி செய்துள்ள மொத்த பலசரக்கு 62இ981 மெற்றிக் தொன் ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.