ஓடிடியில் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’

துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. 

நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான ‘ஹே சினாமிகா’ ரசிகர்களிடம் வரவேற்பைக் குவித்தது. பொதுவாகவே, துல்கர் சல்மானுக்கு இளைஞர் கூட்டமும் பெண் ரசிகைகளும் அதிகம். அதுவும்,  ‘ஹே சினாமிகா’வில் காதல் மனைவியை உருகி உருகி காதலிக்கும் ஹவுஸ் ஹஸ்பண்டாக நடித்தால் ரசிகர்களின் எண்ணிக்கை கூடாமலா இருக்கும்?. காதலர்களை ஹார்ட் அர்ரெஸ்ட்டே செய்துவிட்டார். அந்தளவிற்கு, காதலர்கள் கூட்டம் ஜோடி ஜோடியாய் தியேட்டர்களை ஆக்கிரமித்திருந்தது. காஜல் அகர்வால், அதிதி ராவ் நடித்திருந்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். அவரின், பாடல்களும் ஹிட் அடித்தன.

image

இப்படத்தின், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ஹே சினாமிகா’ தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘ஹே சினாமிகா’ படத்தினைத் தொடர்ந்து சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘சல்யூட்’ படமும் கவனம் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.