குறைந்த கல்வித் தகுதி… மதுரை அஞ்சல் துறை வேலை வாய்ப்பு… உடனே விண்ணப்பிங்க!

India Post invites application for Staff Car Driver posts in Madurai: இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாட்டு கிளைகளில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறையின், தமிழ்நாடு வட்டம், மதுரை மண்டலத்தைச் சேர்ந்த திண்டுக்கல், காரைக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள கார் டிரைவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.05.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

கார் ஓட்டுனர் (Staff Car Driver)

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

காலியிட விவரம்: திண்டுக்கல் – 1, காரைக்குடி -1, இராமநாதபுரம் -1, சிவகங்கை- 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 56 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 18,000 – 62,000

இதையும் படியுங்கள்: நெய்வேலி என்.எல்.சி-யில் 300 பணியிடங்கள்; பி.இ படித்தவர்கள் மிஸ் பண்ணாதீங்க!

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவர குறிப்பு அடங்கிய விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Manager, Mail Motor Service, Tallakulam, Madurai – 625 002

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.05.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_23032022_TN_Eng.pdf என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.