செக் போஸ்ட்| Dinamalar

சட்டப் படிப்பை கைவிட்டாரு!செக்யூரிட்டி ஆபிசர் தான், ஒட்டு மொத்த கோல்டு மைனிங் சொத்துகளுக்கும் பாதுகாப்பு. இவர் 24 மணி நேரம் விழிப்புடன் இருக்க வேண்டும். கண்காணிக்க வேண்டியவர், ஏனோ தானோன்னு இருக்கிறாருன்னு பல புகார்கள் டில்லி வரைக்கும் சென்றது. இதற்கு திருட்டு சம்பவங்களும், ஆக்கிரமிப்புகளும் சாட்சி.பாதுகாப்பு பணியுடன் ‘லா’ காலேஜில் ரெகுலர் மாணவராக சேர்ந்து கவனம் செலுத்தினார்.

ரெண்டு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாதுன்னு தெரிந்தும் 2020- – 21ல் படிப்பை நிறைவு செய்து 2021- – 22ல் படிப்பை தொடர முயன்றார். பொது மக்களின் எதிர்ப்பால், படிப்பை நிறுத்தி க்கொண்டதாக தெரிவித்துள்ளார்.இனிமேலாவது மைனிங் சொத்துகளுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருக்க வேணும்னு ‘மாஜி’ தொழிலாளிங்க சொல்றாங்க!’மாஜி’ பி.எம்., சிலை திறப்பாங்களா?ஆ.பேட்டையில் ‘மாஜி’ பிரதமர் சிலை நிறுவி 25 ஆண்டு கடந்தும் கூட, துணியால் மூடி வைத்து தான் இருக்காங்க. சிலை எந்த நிலையில் இருக்கிறதென தெரியவில்லை. மாஜி பிரதமர் மகன் கூட, மூன்று ஆண்டுகளுக்கு முன் கோல்டன் சிட்டிக்கு வந்திருந்தார். அவரை திறக்க செய்திருக்கலாம்; யாரும் செய்யவில்லை. ஆ.பேட்டையை மேம்படுத்த போவதாக முனி தெரிவித்திருப்பதால், சிலையை திறப்பாங்கன்னு எதிர்பார்க்கலாமா!வெட்ட வெளிச்சம்!ப.பேட்டை தாலுகாவில் இருந்து வந்த ஏ.பி.எம்.சி., என்ற தாலுகா விவசாயிகள் விளைபொருள் கூட்டுறவுச்சங்கத்தை இரண்டாக பிரித்து, முதல் முறையாக கோல்டன் சிட்டி தாலுகாவுக்கென தனியாக கூட்டுறவுச் சங்கம் ஏற்படுத்தி இருக்காங்க. 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறவங்களை கூட்டுறவுச்சங்க உறுப்பினர் ஆக்கியிருக்காங்க. 710 உறுப்பினர்கள் உள்ளனர். 15 இயக்குனர்களை தேர்வு செய்ய ஏப்ரல் 4ல் தேர்தல் நடக்குது.பூக்கட்சியின் ரெண்டு கோஷ்டிகளும் வேட்பாளர்களை நிறுத்தியதன் மூலம் விரிசல் வெளிப்படையாக தெரியிது. கை கட்சியில் ஒரு தரப்பினர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளாங்க. பூ கட்சியில் இப்புடி ஒரு நிலை ஏற்பட்டிருப்பதை தவிர்க்க, மேலிடம் எதுக்கு சும்மா வேடிக்கை பார்க்குதோ!என்ன தொழிற்சாலை

?பல ஆயிரம் கோடி முதலீட்டில் தொழிற்சாலைகள் உருவாக்குவதாக அதன் மினிஸ்டர் ஹூப்பள்ளியில் தெரிவித்திருக்காரு. பூ ஆட்சியில், தனியார் முதலீடுகள் பெறுவதில் எக்ஸ்பெர்ட்டான தொழில் துறை மந்திரி, அவ்வப்போது, கோல்டன் சிட்டியில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க போவதாக சொல்றார். ஆனால் எத்தகைய தொழிற்சாலை, எதை உற்பத்தி செய்யப்போறாங்கன்னு சொல்லலையே. முதலீடு செய்யப்போகும் தனியார் நிறுவனமும் எதுவென புரிஞ்சிக்க முடியலையே.’பெமலை’ கூட தனியார் நிறுவனம் விலை பேசி 60 சதவீத பங்கு வாங்கியதாக லிஸ்ட் வெளியே தெரிந்தது. அதுபோல 3,500 ஏக்கரில் உருவாகிற தொழிற்பேட்டையில் அமைய இருக்கும் தொழிற்சாலைகள் எது, என்னவோ தெரியலையே!

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.