ஆளுங்கட்சி ஷாக்… தஞ்சை மாநகராட்சி தி.மு.க கவுன்சிலர் பதவிக்கு வேட்டு வைத்த ஆணையர்!

Tamilnadu Thanjavur DMK Member Disqualified : உண்மையை மறைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் நோட்டீல் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய ஜனநாயகத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. குற்றவழக்குகள் உள்ளவர்கள், அரசுப்பணியாளர்களாக இருப்பவர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் நெருங்கிய உறவினகர்கள் யாரும் அரசு ஒப்பந்தத்தில் இருக்க கூடாது என பல விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில், அன்ன பிரகாஷ், என்பவர்  தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு 16ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர், தஞ்சாவூர் திமுக எம்எல்ஏ டிகேஎஸ் நீலமேகத்தின் மருமகன் ஆவார். மேலும் அண்ண பிரகாஷின், சகோரர் ராம் பிரகாஷ் அரசு ஒப்பந்ததாரராக உள்ளர்.

தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்பாளர்களின் நெருங்கிய உறவினர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசு ஒப்பந்தங்களைப் பெறுவதில் ஈடுபடக் கூடாது. மேலும் அன்ன பிரகாஷ் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனது சகோதரர் அரசு ஒப்பந்ததாரர் என்பதை குறிப்பிடவில்லை. இது தொடர்பாக விளக்கம் கேட்டு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையருமான கே.சரவணக்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ராம் பிரகாஷ் கடந்த மார்ச் 18 ந் தேதி தேர்தல் ஆணையரிடம் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற அன்ன பிரகாஷ் இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை. மேலும் அவர் ஆஜராவதற்கான காலக்கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. இதனால் தேர்தலில் அன்ன பிரகாஷ் வெற்றி செல்லாது என்றும் அவரை தகுதி நீக்கம் செய்தும் தேர்தல் ஆணையர் அவருக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆனால், தனக்கு இதுவரை எந்த நோட்டீசும் வரவில்லை என்று கூறியுள்ள அன்ன பிரகாஷ்,  இது குறித்து தான் “ஊடகங்கள் மூலமாகத்தான் நான் அதை அறிந்தேன் என்றும், இதனை சட்டப்படி எதிர்கொள்வேன்,என்றும் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.