சிக்கலில் இந்தியா.. நிலக்கரி விலை உயர்வால் பல துறைகள் தவிப்பு.. விலை இன்னும் அதிகரிக்கலாம்?

பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் – ரஷ்யா இடையேயான தாக்குதலானது தொடர்ந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் பல முக்கிய பொருட்களின் விலையும் மிக மோசமான விலையேற்றத்தினை கண்டுள்ளது.

அப்படி விலையேற்றம் கண்ட பொருட்களில் ஒன்று நிலக்கரி. இது சர்வதேச சந்தையிலும் சரி, உள்நாட்டு சந்தையிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மீடியம் டெர்மில் நல்ல லாபம் கொடுக்க கூடிய 7 பங்குகள்.. நிபுணர்களின் சூப்பர் பரிந்துரை

குறிப்பாக நிலக்கரி விலையேற்றத்தினால் மின் உற்பத்தியாளர்கள் மற்றும் ஸ்டீல் உற்பத்தியாளர்கள், சிமெண்ட், அலுமினியம் உற்பத்தியாளர்களை பெரியளவில் பாதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிலக்கரி விலை அதிகரிக்கலாம்

நிலக்கரி விலை அதிகரிக்கலாம்

நிலக்கரி விலையானது முதல் காலாண்டில் 45 – 55% அதிகரிக்கலாம் என்று மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா கணித்துள்ளது. இது ரஷ்யாவின் நிலக்கரி இறக்குமதியினை எந்த நாடும் ஈடுசெய்ய முடியாது என்பதால், இந்த விலையேற்றம் இருக்கலாம் என்று கூறியுள்ளது.

பற்றாக்குறை ஏற்படலாம்

பற்றாக்குறை ஏற்படலாம்

மேலும் இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் 601 மில்லியன் டன்னாக நிலக்கரி உற்பத்தி உள்ளது. இதனை அடுத்த நிதியாண்டில் 700 மில்லியன் டன்னாக இந்தியா உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தப்படவில்லை எனில், இந்தியாவில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் இக்ரா எச்சரித்துள்ளது.

இதுவரை இல்லாத உச்சம்
 

இதுவரை இல்லாத உச்சம்

உக்ரைன் ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவின் நிலக்கரி விலையானது கடந்த மார்ச் மாத டெலிவரியில், டன்னுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 330 டாலர்களாக உச்சம் தொட்டது. கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்திய அனல் மின் நிலையங்களுக்கு ஆஸ்திரேலியா, இந்தோனேசியா தான் முக்கிய நிலக்கரி இறக்குமதியாளர்களாக உள்ளன.

 FY2023-ல் விலை  அதிகரிக்கலாம்

FY2023-ல் விலை அதிகரிக்கலாம்

ரஷ்யா – உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் சப்ளை சங்கிலியில் நிலவி வரும் பிரச்சனைக்கு மத்தியில், வரும் நிதியாண்டின் முதல் காலாண்டில் விலை 45 – 55% வரை அதிகரிக்கலாம். வரவிருக்கும் நிதியாண்டு முழுவதுமே நிலக்கரியின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இக்ரா தெரிவித்துள்ளது.

உள்நாட்டிலும் எகிறிய விலை

உள்நாட்டிலும் எகிறிய விலை

இதற்கிடையில் கோல் இந்தியா நடத்திய இ- ஏலத்திலும் நிலக்கரியின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. கோல் இந்தியா நிர்ணயித்த அடிப்படை விலையை விட, பிப்ரவரி 2022ல் இதுவரை இல்லாத அளாவில் 270% அதிகரித்தது. இது மார்ச் மாதத்தில் 300% கூட எட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விலையை அதிகரிக்க தூண்டும்

விலையை அதிகரிக்க தூண்டும்

அனல் மின் நிலையங்கள் அதிக விலை கொடுத்து நிலக்கரி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் மின் உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. இது இறுதியில் நுகர்வோருக்கு விலையை அதிகரிக்க தூண்டும்.

தொடர்ந்து நிலக்கரியின் தெவையானது அதிகரித்து வரும் நிலையில், மின்சாரம், ஸ்டீல், அலுமினியம், சிமெண்ட் உற்பத்தியாளர்களுக்கும் நிலக்கரி குறைவாகவே வழங்கப்படலாம். இது மற்ற துறைகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தலாம். விலைவாசியினை அதிகரிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Russia – ukraine crisis! Coal prices may stay higher throughout FY23: ICRA

Russia – ukraine crisis! Coal prices may stay higher throughout FY23: ICRA/சிக்கலில் இந்தியா.. நிலக்கரி விலை உயர்வால் பல துறைகள் தவிப்பு.. விலை இன்னும் அதிகரிக்கலாம்?

Story first published: Tuesday, March 29, 2022, 14:57 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.