திடீரென நெல்சனுக்கு நன்றி தெரிவிக்கும் ரசிகர்கள்..காரணம் இதுதான்..!

தற்போது எங்கு திரும்பினாலும் ரசிகர்கள்
பீஸ்ட்
படத்தைப்பற்றித்தான் பேசிவருகின்றனர். பொதுவாக பெரிய ஹீரோ படங்களுக்கு இதுபோல் பரபரப்பு இருப்பது இயல்பான ஒன்றுதான். இருப்பினும் கடந்த சில வருடங்களாக இந்த அப்டேட் என்ற வார்த்தை மிகப்பெரிய ட்ரெண்டிங்கில் உள்ளது.

அந்த காலத்தில் படத்தின் அறிவிப்பு வந்து படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன் ட்ரைலர் வெளியாகும். ஆனால் இப்பொது இருக்கும் சோஷியல் மீடியா உலகத்தில் ஒரு படம் அறிவிக்கப்பட்டால் ரசிகர்கள் ஒரு வாரத்திற்கு ஒருமுறை அப்படத்தைப்பற்றிய அறிவிப்பு வெளியாகவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

சிவகார்த்திகேயன் போட்ட வழக்கு..!விரைவில் தீர்ப்பு..!

அப்படி வெளியாகவில்லை என்றால் அவர்களாகவே ஒரு தகவலை பரப்பி விடுகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களிடம் அஜித்தின் வலிமை படம் சிக்கியது. வலிமை அப்டேட் வலிமை அப்டேட் என ரசிகர்கள் கண்ணில் படுவோரிடமெல்லாம் கேட்டு வந்தனர். அதே நிலைமைதான் தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்திற்கும் வந்துள்ளது.

பீஸ்ட் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் ஒரே நேரத்தில் பல படங்களை தயாரித்து வந்தது. பீஸ்ட் படத்தை தவிர மற்ற படங்களின் அறிவிப்பு வந்துகொண்டே இருக்கையில் ரசிகர்கள் பொறுமையை இழந்தனர். பின்பு ரசிகர்களின் மனநிலையை புரிந்துகொண்ட தயாரிப்பு நிறுவனம்

படத்திலிருந்து இரண்டு பாடல்களை வெளியிட்டனர்.

இருப்பினும் படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது மீண்டும் அப்டேட் கேட்டு படக்குழுவை அன்புத்தொல்லை செய்துவருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது படத்தின் இயக்குனர் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

நெல்சன்
தற்போது நாளை என்று ஒரு பதிவை போட்டுள்ளார். அந்த பதிவை பார்த்த
விஜய்
ரசிகர்கள் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர். எனவே நாளை பேஸ்ட் படத்தின் டீசர் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சங்க கட்டிடம் சுற்றுலா தலமாக மாறும் – விஷால் பேச்சு!

அடுத்த செய்தி‘ஏகே 61’ படத்துல இதெல்லாம் கம்மி… வெளியான மாஸ் தகவல்: குஷியில் ரசிகர்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.