நடிகைள் பதிவிடும் ஒரு விளம்பரத்திற்கு இவ்வளவு தொகையா ?

சமூக வலைத்தளங்ளில் வைத்துள்ள கணக்குகளை பல நடிகர்கள், நடிகைகள் தங்களது படங்களைப் பற்றிய அப்டேட் தருவதற்காக வைத்திருப்பதாக சில ரசிகர்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில் சில நடிகர்கள், நடிகைகள் அதன் மூலம் சம்பாதிக்கத்தான் வைத்திருக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

ஒரு நடிகரோ, நடிகையோ எத்தனை மில்லியன் பாலோயர்களை வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து விளம்பரப் பதிவிற்கு நிறுவனங்கள் பணம் தருகின்றன. குறிப்பாக நடிகர்களை விட நடிகைகள்தான் இதில் அதிகம் சம்பாதிக்கிறார்களாம். அழகு சாதனப் பொருட்கள் மற்றும் ஆடை விளம்பரங்கள்தான் சமூக வலைத்தளங்களில் அதிகமாக இடம் பெறுகின்றன.

முன்னணி நடிகைகளுக்கும், அவர்கள் வைத்துள்ள பாலோயர்களைப் பொறுத்து பல லட்சங்களைத் தருகின்றனவாம் நிறுவனங்கள். தமிழ் நடிகைகளில் இப்படி விளம்பரப் பதிவிட்டு அதிகம் சம்பாதிப்பவர்களில் சமந்தா முன்னணியில் இருப்பதாகத் தகவல். ஒரு விளம்பரப் பதிவிற்கு இதுவரையிலும் 8 முதல் 10 லட்சம் வரை வாங்கி வந்த சமந்தா இனிமேல் 15 முதல் 20 லட்சம் வரை கேட்கப் போகிறாராம். 2 கோடிக்கும் அதிகமான பாலோயர்களை சமந்தா வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு தமிழ், தெலுங்கில் மட்டுமல்லாது தற்போது ஹிந்தியிலும் வரவேற்பு இருப்பதால் கட்டணத்தை ஏற்றிவிட்டாராம் சமந்தா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.