'அப்பாவுடன் சேர ஆசை' – கண்கலங்கிய வனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமா, பிசினஸ் என பிஸியாக பெண்ணாக வலம் வருகிறார் நடிகை வனிதா. அதேசமயம் அவரை தேவையில்லாமல் யாராவது சீண்டினால், பழைய சந்திரமுகியாக மாறிவிடுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்நிலையில் அவர் தனது தந்தையை நினைத்து கண்கலங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் வனிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் புரோமோஷனுக்காக வனிதா மற்றும் தியாகராஜன் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தனர். அதில் நடிகர் தியாகராஜன் 'அப்பாவ மிஸ் பன்றியா?' என வனிதாவிடம் கேட்கிறார். அதுவரை ஜாலியாக பேசிய வனிதா உடனே கண்கலங்கியவாறு 'நிச்சயமா, ரொம்ப மிஸ் பண்றேன். ரஜினி அங்கிள் எனக்காக அப்பாகிட்ட பேசினாரு. ஆனா முடியல. குடும்பத்தில் பிரச்னை வர்றது இயல்பு தான். அப்பாவோட சீக்கிரமே சேருவேன். விரைவில் நடக்கும்' என கூறியுள்ளார்.

தியாகராஜனும், 'வனிதாவோட அப்பா ரொம்ப நல்லவர். அவர் பொண்ணும் நல்ல பொண்ணு தான். அவங்க குடும்பம் ஒண்ணு சேரணும். அதுதான் என்னோட ஆசை' என அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.