இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பங்களிப்புடன் மட்டக்களப்பில் பசுமை தேசம் விவசாய நிகழ்ச்சித்திட்டம் 

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ,தும்பாலை பகுதியில் பசுமை தேசம் விவசாய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று (29) இடம்பெற்றது.

தேசிய கொடியேற்றியதனையடுத்து பயன்தரு மரங்கள் ,அதிதிகளினால் நடப்படதன் பின்னர் வீட்டுத்தோட்ட பயிர்களும் நடப்பட்டன. அதனையடுத்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு பயன்தரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் செல்வி.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.