உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்! எடையை குறைக்க வேண்டிய நிலை: இலங்கைப்பெண் லாஸ்லியா


உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல் இருந்த காரணத்தால் உடல் எடையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக லாஸ்லியா தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா, அந்த சீசனில் அதிக கவனம் பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்து வெளியே வந்து சினிமா வாய்ப்புகளை பெறும் வெகு சிலரில், லாஸ்லியாவும் ஒருவர்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா நிறைய போட்டோ ஷுட்டும் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவார்.
பொதுவாக பூசினாப்ல உடல்வாகை கொண்ட லாஸ்லியா சற்றே மெலிந்து தலை முடியை கட் செய்து ஆளே மாறிவிட்டார்.

இதையும் படிங்க: இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் உடலின் முக்கிய உறுப்புகள் காலி! கவனம் தேவை

இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்த நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில் எனக்கு உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல் இருந்தது. அதனால் உடல் எடையை குறைக்க வேண்டிய நிலை.

இதுமட்டுமின்றி சினிமாவுக்கு தயாராகவே உடல் எடையைக் குறைத்தேன். என்னுடைய முதல் காதல் பள்ளிப் பருவத்தில் தான். அதுவும்  ஒருதலை காதல். அந்த பையனுக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது.

நான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப் இருந்தபோது அவன் எனக்கு முத்தம் கொடுத்தான் என்றும் கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.