சினிமா பாணியில் பழிக்குப்பழி:மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு கொலையாளியான தந்தை-நடந்தது என்ன?

மத்தியப் பிரதேசத்தில் மகளை பாலியல வன்கொடுமை செய்தவரை கொலை செய்து உடலை துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை மற்றும் தாய்மாமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் மாவட்ட தலைமையகத்தில் இருந்து 40 கி.மீ தொலைவில் ஒட்டிக் கொண்டிருக்கும் அஜ்னல் ஆற்றில் ஒரு மனிதனின் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்தை காவல்துறையினர் சென்றடையும் முன்பே ஆற்றில் உடல் மிதக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி கடும் அதிர்வலைகளை அம்மாநிலத்தில் ஏற்படுத்தியது. உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, காவல்துறையினர் விசாரணையை துவக்கினர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் சக்தாபூர் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான திரிலோக்சந்த் என தெரியவந்தது. அடுத்த கட்ட விசாரணையில் பல அதிரவைக்கும் உண்மைகள் தெரியவந்தன.
Murder under Indian Penal Code: All you need to know about it
திரிலோக் சந்த் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், அந்த பெண்ணின் தந்தையும் தாய் மாமாவும் திரிலோக்சந்தை சனிக்கிழமையன்று மோட்டார் சைக்கிளில் அஜ்னல் ஆற்றுக்கு அழைத்துச் சென்றதும் தெரியவந்தது. ஆற்றங்கரையில் வைத்து திரிலோக்சந்தை தலையை துண்டித்து, மீன் வெட்டும் கருவியால் உடலை இரண்டு பகுதிகளாக வெட்டியுள்ளனர். அதன்பின் உடலை ஆற்றில் வீசிவிட்டு கிளம்பியதும் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு யாருக்காவது கொலையில் தொடர்பு உண்டா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திரிலோக் சந்தும் கைது செய்யப்பட்ட் இருவரும் உறவினர்கள் என்பதால் அவர்கள் அழைத்ததும் ஆற்றங்கரைக்கு சென்றுள்ளார் என காவல்துறையுனர் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.