தமிழ் பேராய விருதுகள் ஏப்., 30க்குள் விண்ணப்பம்| Dinamalar

சென்னை : எஸ்.ஆர்.எம்., தொழில்நுட்ப கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:தமிழ் பேராயம் ஆண்டு தோறும், சிறந்த தமிழ் நுால், தமிழ் இதழ், தமிழ்ச் சங்கம், சிறந்த தமிழறிஞர் ஆகிய பிரிவுகளில், 12 தலைப்புகளில் விருதுகளை வழங்கி வருகிறது.இவ்வகையில், இந்தாண்டு, தமிழ் பேரறிஞர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கு மூன்று லட்சம் ரூபாய் பரிசுடன், பாரிவேந்தர் பைந்தமிழ் விருது வழங்கப்பட உள்ளது.

புதுமைபித்தன் படைப்பிலக்கிய விருது, பாரதியார் கவிதை விருது, அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது, ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது, அப்துல்கலாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு விருது.முத்துத் தாண்டவர் தமிழிசை விருது, பரிதிமார் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூக நீதி விருது, தலா ஒரு லட்ச ரூபாய் பரிசுடன் வழங்கப்பட உள்ளன. சிறந்த தமிழ் இதழ், சிறந்த தமிழ் சங்கம், சிறந்த கலைக்குழு விருதுகள், தலா, 50 ஆயிரம் ரூபாய் பரிசுடன் வழங்கப்பட உள்ளன.

இதற்கான பரிந்துரைகளை, ஏப்., 30க்குள், ‘தலைவர், தமிழ்பேராயம், அறை எண்: 518, ஐந்தாம் தளம், எஸ்.ஆர்.எம். பல்கலை நிர்வாக கட்டடம், காட்டாங்கொளத்துார், செங்கல்பட்டு மாவட்டம் – 603 203’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 – 2741 7375, 2741 7376 என்ற தொலைபேசி, [email protected] என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.