'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திற்கு வரிவிலக்கு அளித்தது புதுச்சேரி அரசு

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு ஏற்கனவே ஹரியானா, மத்திய பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தராகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் வரிச்சலுகை வழங்கியுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி அரசும் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு வரிச்சலுகை அளித்துள்ளது.

வரிச்சலுகை வழங்க வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதனை ஏற்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

Time to move beyond 'The Kashmir Files' and look at sufferings of Hindus  next door-India News , Firstpost

1990களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்ட திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்த திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் வெளியான நிலையில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் ‘Y’ பிரிவு பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ‘Y’ பிரிவு பாதுகாப்பின் கீழ் வரும் அவருக்கு 8 காவல் அதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு கமாண்டோ படையினரும் அடங்குவர் என சொல்லப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி உட்பட பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் காங்கிரஸ் இந்த படத்தை கடுமையாக விமர்சித்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.