பிரம்மாண்ட இயக்குனர் வீட்டில் விசேஷம்: பரபரக்கும் கோலிவுட்..!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி
ஷங்கர்
, ‘
விருமன்
’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை
முத்தையா
இயக்கி வருகிறார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது.

இயக்குநர் முத்தையா எழுதி இயக்கும் இந்தப்படத்திற்கு ‘விருமன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றார்கள். கொம்பன் படம் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப படமாக உருவாகவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு S.K.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

பொதுவாக இயக்குநர் முத்தையா படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமிக்க, வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும். அதே போல், தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் அதிதி ஷங்கர். முன்னணி இயக்குநர் ஷங்கரின் மகள் இவர் என்பதால், இப்போதே இந்தப்படத்தில் அதிதியின் கதாபாத்திரம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நெருங்க முடியாத சாதனை படைத்த ‘கே.ஜி.எஃப் 2’: ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

இந்நிலையில் இந்தப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தற்போது திடீரென அதிதி ஷங்கருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துவருவதாகவும், அது சம்மந்தமான வேலைகளில் அவரின் குடும்பத்தினர் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாரிப்பாளர் குஞ்சுமோனை நேரில் சந்தித்து ஷங்கர் பத்திரிக்கை கொடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘விருமன்’ படத்தை தொடர்ந்து அதிதி அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியதாக தகவல்கள் வெளியாகின. கோகுல் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘கொரோனாகுமார்’ படத்திலும் சிம்பு ஜோடியாக அதிதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது அதிதிக்கு விரைவில் திருமணம் என்று பரவி வரும் செய்தி கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நெல்சனை விளாசும் விஜய் ரசிகர்கள் – என்ன காரணம் தெரியுமா?

அடுத்த செய்திநெருங்க முடியாத சாதனை படைத்த ‘கே.ஜி.எஃப் 2’: ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.