பெரம்பலூரில் நிலுவையில் உள்ள புதிய ரயில்பாதை திட்டத்தை தொடங்க வேண்டும்!: பிரதமர் மோடிக்கு பாரிவேந்தர் எம்.பி. வலியுறுத்தல்..!!

டெல்லி: பெரம்பலூரில் நிலுவையில் உள்ள புதிய ரயில்பாதை திட்டத்தை தொடங்க வேண்டும் என்று பாரிவேந்தர் எம்.பி. கோரிக்கை விடுத்திருக்கிறார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் வலியுறுத்தினார். அரியலூர் – பெரம்பலூர்-துறையூர் மற்றும் நாமக்கல் இடையே ரயில்பாதை அமைக்க திட்டம் போடப்பட்டது. பெரம்பலூர் மக்களின் 50 ஆண்டுகால கனவை நிறைவேற்ற பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.