பொழுதுபோக்கை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் – Samsung அளிக்கும் உறுதிமொழி!

இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகவும் நம்பகமான நுகர்வோர் மின்னணு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் இன்று அதன் புத்தம் புதிய ஸ்மார்ட் Freestyle அல்ட்ரா போர்டபிள் ப்ரொஜெக்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மக்களுக்கு சாத்தியமான பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குவதே இந்த Smart Projector-இன் நோக்கம் என சாம்சங் தெரிவித்துள்ளது.

பாரம்பரிய பெட்டி போன்ற ப்ரொஜெக்டர்களிலிருந்து மாறுபட்டதாக இந்த போர்டபிள் ப்ரொஜெக்டர் இருக்கிறது. இது 180 டிகிரி சுழலும் என்பதால், எங்கு வேண்டுமானாலும், எந்த கோணத்திலும் வேண்டுமானாலும் பொருத்தலாம். எந்த நேரத்திலும் ஒரு பெரிய திரையை பயனர்கள் அனுபவிக்க இது அனுமதிக்கிறது.

சாம்சங் The Freestyle சிறப்பம்சங்கள்

ஃப்ரீஸ்டைல் ப்ரொஜெக்டர் உதவியுடன் 100″ இன்ச் வரை திரை அளவில் வீடியோக்களை நாம் திட்டமிட முடியும். HDR10 ஆதரவுடன் 1920×1080 பிக்சல்கள் கொண்ட தெளிவான படத்தை வெளிப்படுத்துகிறது. இது ஒரு மெல்லிய உருளை வடிவத்தில் வருகிறது. இது வெறும் 800 கிராம் எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. 16:9 விகித திரையை பிரதிபலிக்கிறது.

புதிய சாம்சங் ப்ரொஜெக்டரின் இருக்கும் Auto KeyStone அம்சமானது, சாய்வாக இருக்கும் படங்களை, தானாக சரிசெய்கிறது. Auto Focus இருப்பதால், தெளிவான திரையை இது பிரதிபலிக்கிறது. Auto Leveling அம்சத்தின் உதவியுடன் எந்த இடத்திலும் ப்ரொஜெக்டரை பயன்படுத்த அனுமதிக்கிறது.

வாரத்துக்கு ரெண்டு – Samsung விரும்பிகளுக்கு ஜாக்பாட்!

சாம்சங் Bixby, அமேசான் Alexa ஆகிய வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆதரவையும் இந்த ப்ரொஜெக்டர் வழங்குகிறது. 360 டிகிரி ஒலியை வெளிப்படுத்தும் ஸ்பீக்கர்கள் இதில் உள்ளது. ஒரு ப்ரொஜெக்டர் பல வேலைகளை உங்களுக்காக சுலபமாக்கி உள்ளது.

Netflix, Hulu, YouTube, Disney Hotstar, Prime Video போன்ற பிரபல ஒடிடி தளங்கள் இதில் நிறுவப்பட்டுள்ளது கூடுதல் பொழுதுபோக்கை உங்களுக்கு வழங்கும். மேலும், Mirror Casting ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. Airplay 2, Micro HDMI port ஆகிய இணைப்பு ஆதரவினையும் இந்த ப்ரொஜெக்டர் கொண்டுள்ளது.

30 இன்ச் முதல் 100 இன்ச் வரை திரையை மாற்றி அமைக்கக்கூடிய அம்சம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. The Freestyle அல்ட்ரா போர்டபிள் ப்ரொஜெக்டர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஆண்டுகள் நிறுவன தரப்பில் இருந்து உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

The Freestyle அல்ட்ரா போர்டபிள் ப்ரொஜெக்டர் விலை விவரங்கள்

இந்த ஃபரீஸ்டைல் ப்ரொஜெக்டரை Samsung Shop அல்லது Amazon ஆகிய தளங்களில் இருந்து பயனர்கள் வாங்கலாம். இதன் அறிமுக விலை ரூ.84,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.5000 வரை கேஷ்பேக்கை பெறலாம்.

மேலும், மார்ச் 29, 2022 மாலை 6 மணி முதல் 2022 மார்ச் 31 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை வரையறுக்கப்பட்ட கால சலுகையாக, ஒவ்வொரு ப்ரொஜெக்டர் உடனும் இலவசமாக ரூ.5,900 மதிப்புள்ள கேரி கேஸ் வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.4,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகள்:

இந்த போன்களில் இனி WhatsApp இயங்காது!

LED டிவி விலை வெறும் ரூ.999 – பட்டன் போனை விட மலிவான டிவிக்கள்!

தயாராகும் Xiaomi Pad 5 – குறைந்த விலையில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டம்!

அடுத்த செய்திஇந்த போன்களில் இனி WhatsApp இயங்காது!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.