வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து மேல்முறையீட்டு வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: வன்னியர் இடஒதுக்கீடு ரத்து செய்ததை எதிர்த்து, தமிழகஅரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்த நிலையில், நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியின்போது, வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்  10.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கியது. இதற்கசான சட்ட முன்வடிவு சட்டமன்றதில் நிறைவேற்றப்பட்டது, 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதன் அடுத்தக்கட்டமாக திமுக ஆட்சிக்கு வந்ததும், ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு அரசாணை வெளியிட்டது.

இதற்கு ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்த நிலையில், மற்ற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்  எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அமர்வு விசாரித்து கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம், ‘சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இதனை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?” எனக் கேள்வியெழுப்பிவிட்டு, வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது எனத் தீர்ப்பளித்தனர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.  இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், `வன்னியர் உள்இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட காரணத்தால் மாணவர் சேர்க்கை, அரசுப் பணி நியமனம், கவுன்சலிங் போன்றவற்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்றார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பேசுகையில், ` நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க விரும்பவில்லை’ எனக் கூறிவிட்டு, `10.5 சதவிகித இடஒதுக்கீட்டில் ஏற்கெனவே நடைபெற்ற பணி நியமனம், மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் மாற்றம் செய்யக் கூடாது’ எனவும் `இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரையில் புதிதாக மாணவர் சேர்க்கையோ, பணி நியமனமோ நடைபெறக் கூடாது’ எனக் குறிப்பிட்டுவிட்டு வழக்கை விசாரித்து வந்தது. இறுதி விசாரணை பிப்ரவரி 24ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வன்னியர் இடஒதுகீடு மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்தி வைப்பு…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.