விலை உயர்வு கண்டித்து வரும் 7ல் ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: விருதுநகரில், தேமுதிக சார்பில் விலை உயர்வை கண்டித்து வரும் 7ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.இதுகுறித்து தேமுதிக வெளியிட்ட அறிக்கை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் தேமுதிக சார்பில் வரும் ஏப்ரல் 7ம் தேதி மாலை 4 மணிக்கு விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.