கச்சா எண்ணெய் 100 டாலர் கீழ் சரிந்தும், பெட்ரோல் – டீசல் விலை தொடர் உயர்வு.. மக்கள் கண்ணீர்..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இன்று பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு சுமார் 80 பைசா அதிகரித்து உள்ளது.

இதன் மூலம் கடந்த 10 நாட்களில் எரிபொருள் விலை லிட்டருக்கு 6.40 ரூபாய் அதிகரித்து மக்கள் தலையில் பெரும் சுமை வைத்துள்ளது மத்திய அரசு.

முகேஷ் அம்பானியை விட 2 மடங்கு பெரிய பணக்காரர் உஸ்மான் அலி கான்..!

ரஷ்யா - உக்ரைன்

ரஷ்யா – உக்ரைன்

இதைவிட முக்கியமாக ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை தடாலடியாக 100 டாலருக்குக் கீழ் குறைந்துள்ளது. ஆனாலும் மத்திய அரசு எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

அமெரிக்கக் கச்சா எண்ணெய் விலை கடந்த 24 மணிநேரத்தில் 100 டாலர் அளவில் இருந்து சரிந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 5.57 சதவீதம் சரிந்து ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 101.8 டாலராக உள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4.54 சதவீதம் சரிந்து 108.3 டாலராக உள்ளது.

பெட்ரோல் டீசல் விலை
 

பெட்ரோல் டீசல் விலை

இப்படிக் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், இந்தியாவில் தினமும் காலை 6 மணிக்கு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு மூலம் தற்போது அனைத்து நுகர்வோர் மற்றும் உணவுப் பொருட்கள் நிறுவனங்கள் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு பெட்ரோல் விலை

தமிழ்நாடு பெட்ரோல் விலை

அரியலூர் – 108.69 ரூபாய்

செங்கல்பட்டு – 108.00 ரூபாய்
சென்னை – 107.45 ரூபாய்
கோயம்புத்தூர் – 107.97 ரூபாய்
கடலூர் – 109.58 ரூபாய்
தருமபுரி – 108.80 ரூபாய்
திண்டுக்கல் – 108.24 ரூபாய்
ஈரோடு – 108.08 ரூபாய்
கள்ளக்குறிச்சி – 109.68 ரூபாய்
காஞ்சிபுரம் – 107.82 ரூபாய்
கன்னியாகுமரி – 108.77 ரூபாய்
கரூர் – 107.86 ரூபாய்
கிருஷ்ணகிரி – 108.97 ரூபாய்
மதுரை – 108.02 ரூபாய்
நாகப்பட்டினம் – 108.90 ரூபாய்
நாமக்கல் – 107.82 ரூபாய்
நீலகிரி – 109.61 ரூபாய்
பெரம்பலூர் – 108.68 ரூபாய்
புதுக்கோட்டை – 108.25 ரூபாய்
ராமநாதபுரம் – 108.29 ரூபாய்
ராணிப்பேட்டை – 108.43 ரூபாய்
சேலம் – 108.21 ரூபாய்
சிவகங்கை – 108.65 ரூபாய்
தேனி – 108.46 ரூபாய்
தென்காசி – 108.12 ரூபாய்
தஞ்சாவூர் – 108.21 ரூபாய்
திருவாரூர் – 108.70 ரூபாய்
திருச்சிராப்பள்ளி – 108.24 ரூபாய்
திருநெல்வேலி – 107.76 ரூபாய்
திருப்பத்தூர் – 109.39 ரூபாய்
திருப்பூர் – 108.32 ரூபாய்
திருவள்ளூர் – 107.64 ரூபாய்
திருவண்ணாமலை – 108.74 ரூபாய்
தூத்துக்குடி – 108.19 ரூபாய்
வேலூர் – 108.76 ரூபாய்
விழுப்புரம் – 108.85 ரூபாய்
விருதுநகர் – 108.49 ரூபாய்

தமிழ்நாடு டீசல் விலை

தமிழ்நாடு டீசல் விலை

அரியலூர் – 98.77 ரூபாய்

செங்கல்பட்டு – 98.05 ரூபாய்
சென்னை – 97.52 ரூபாய்
கோயம்புத்தூர் – 98.05 ரூபாய்
கடலூர் – 99.59 ரூபாய்
தருமபுரி – 98.86 ரூபாய்
திண்டுக்கல் – 98.32 ரூபாய்
ஈரோடு – 98.16 ரூபாய்
கள்ளக்குறிச்சி – 99.69 ரூபாய்
காஞ்சிபுரம் – 97.88 ரூபாய்
கன்னியாகுமரி – 98.87 ரூபாய்
கரூர் – 97.96 ரூபாய்
கிருஷ்ணகிரி – 99.03 ரூபாய்
மதுரை – 98.12 ரூபாய்
நாகப்பட்டினம் – 98.97 ரூபாய்
நாமக்கல் – 97.91 ரூபாய்
நீலகிரி – 99.53 ரூபாய்
பெரம்பலூர் – 98.76 ரூபாய்
புதுக்கோட்டை – 98.34 ரூபாய்
ராமநாதபுரம் – 98.38 ரூபாய்
ராணிப்பேட்டை – 98.47 ரூபாய்
சேலம் – 98.29 ரூபாய்
சிவகங்கை – 98.73 ரூபாய்
தேனி – 98.55 ரூபாய்
தென்காசி – 98.23 ரூபாய்
தஞ்சாவூர் – 98.30 ரூபாய்
திருவாரூர் – 98.78 ரூபாய்
திருச்சிராப்பள்ளி – 98.33 ரூபாய்
திருநெல்வேலி – 97.88 ரூபாய்
திருப்பத்தூர் – 99.41 ரூபாய்
திருப்பூர் – 98.39 ரூபாய்
திருவள்ளூர் – 97.70 ரூபாய்
திருவண்ணாமலை – 98.78 ரூபாய்
தூத்துக்குடி – 98.30 ரூபாய்
வேலூர் – 98.80 ரூபாய்
விழுப்புரம் – 98.88 ரூபாய்
விருதுநகர் – 98.59 ரூபாய்

இந்திய பெட்ரோல் விலை

இந்திய பெட்ரோல் விலை

டெல்லி – 101.81 ரூபாய்

கொல்கத்தா – 111.35 ரூபாய்
மும்பை – 116.72 ரூபாய்
குர்கான் – 102.13 ரூபாய்
நொய்டா – 101.73 ரூபாய்
பெங்களூர் – 107.30 ரூபாய்
புவனேஸ்வர் – 108.65 ரூபாய்
சண்டிகர் – 101.20 ரூபாய்
ஹைதராபாத் – 115.42 ரூபாய்
ஜெய்ப்பூர் – 114.16 ரூபாய்
லக்னோ – 101.66 ரூபாய்
பாட்னா – 113.07 ரூபாய்
திருவனந்தபுரம் – 112.96 ரூபாய்

இந்திய டீசல் விலை

இந்திய டீசல் விலை

டெல்லி – 93.07 ரூபாய்

கொல்கத்தா – 96.22 ரூபாய்
மும்பை – 100.94 ரூபாய்
குர்கான் – 93.36 ரூபாய்
நொய்டா – 93.28 ரூபாய்
பெங்களூர் – 91.27 ரூபாய்
புவனேஸ்வர் – 98.42 ரூபாய்
சண்டிகர் – 87.48 ரூபாய்
ஹைதராபாத் – 101.58 ரூபாய்
ஜெய்ப்பூர் – 97.32 ரூபாய்
லக்னோ – 93.22 ரூபாய்
பாட்னா – 98.00 ரூபாய்
திருவனந்தபுரம் – 99.87 ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

petrol diesel price hiked 80 paise, even after Crude oil falls below 100 dollar Check price in Coimbatore

petrol diesel price hiked 80 paise, even after Crude oil falls below 100 dollar Check price in Coimbatore கச்சா எண்ணெய் 100 டாலர் கீழ் சரிந்தும், பெட்ரோல் – டீசல் விலை தொடர் உயர்வு.. மக்கள் கண்ணீர்..!

Story first published: Thursday, March 31, 2022, 10:21 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.