சபாநாயகர் எழுதிய புத்தகம் சட்டமேலவையில் விவாதம்| Dinamalar

பெங்களூரு-தேர்தல் மேம்பாடு தொடர்பாக, சட்டமேலவையில் நேற்று சூடான விவாதம் நடந்தது.சட்டசபை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் ஹரி பிரசாத்: விதிமுறை மீறலாக, சபாநாயகர் உரை புத்தகத்தை மேலவைக்கு அனுப்பியுள்ளார்.அதில், உள்ளாட்சிகளின் 25 இடங்களுக்கு, டிசம்பரில் நடந்த தேர்தலுக்கு பெருளவில் பணம் செலவானது. இந்த தொகையில், சிறிய மாநிலங்களை அபிவிருத்தி செய்யலாம் என கூறியுள்ளார்.இதன் மூலம் ஓட்டு போட்ட கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களை, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை அவமதித்துள்ளார். இந்த புத்தகத்தை உடனடியாக திரும்ப பெறுங்கள்.சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி: எங்கள் அலுவலகம் சார்பில், இந்த சபையில் புத்தகம் வழங்கவில்லை.அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி: தேர்தல் மேம்பாடுகள் பற்றி சட்டசபையில் விவாதிக்கும் போது, மேலவையிலும் விவாதிக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் இருந்தது. இதை கூறிய போது, எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு தரவில்லை. எனவே சபாநாயகரின் உரை புத்தகத்தை, தலைமை கொறடா மூலம், மேலவையில் வழங்கினோம்.இவ்வாறு அவர் கூறும் போது, எதிர்க்கட்சியினர் பலரும், அந்த புத்தகத்தை திரும்ப பெறும்படி பிடிவாதம் பிடித்தனர்.இதற்கு பதிலளித்த ஹொரட்டி, ”இவ்விஷயம் இந்த சபையில் விவாதிக்கும் அவசியமில்லை,” என கூறி, விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.