சென்னை இரண்டாம் விமான நிலையம் : இரு இடங்கள் தேர்வு

போபால்

சென்னை இரண்டாம் விமான நிலையம் அமைக்க இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று போபால் சென்னை – போபால் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டது.  இதை மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதித்ராதிய சிந்தியா, இணை அமைச்சர் விகே சிங் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  தொடக்க விழாவில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், சென்னை வடக்கு மக்களவை உறுப்பினர் வீராசாமி கலாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜோதித்ராதித்ய சிந்தியா,

இந்தியா முழுவதும் உள்ள பெரு நகரங்களுக்கு இரண்டாவது விமான நிலையம் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை உருவாக்க உள்ளோம்.  ஏற்கனவே 38 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் டெல்லிக்கு அருகே இரண்டாவது விமான நிலையத்தை ஜிவாரில் கட்டி வருகிறோம்.  இதைப்போல  மும்பையில் இரண்டாவது விமான நிலையம் நவி மும்பையில் 17 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டி வருகிறோம்.

அடுத்ததாக சென்னைக்கும் இரண்டாவது விமான நிலையத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளோம்.  இதற்காக 4 இடங்களை மாநில அரசு விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பரிந்துரைத்து உள்ளோம். மாநில அரசு தேர்வு செய்த அந்த 4 தளங்களிலிருந்து, நாங்கள் பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய 2 தளங்களைத் தேர்ந்தெடுத்து, மாநில அரசின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.   சரியான இடம் இறுதி செய்யப்பட்ட பின் இரண்டாவது விமான நிலையப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.”

எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.