முகேஷ் அம்பானி – ஜெஃப் பெசோஸ் மீண்டும் போட்டி.. ஜாக்பாட் யாருக்கு..?!

இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் துவங்கி, பியூச்சர் ரீடைல் வரையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜெஃப் பெசோஸ்-ன் அமேசான் நிறுவனமும் பல இடத்தில் போட்டிப்போட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக ஒரு துறையில் போட்டிப்போடக் களமிறங்கியுள்ளனர்.

இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக கிரிக்கெட்டில் முகேஷ் அம்பானி – ஜெஃப் பெசோஸ் போட்டிப்போட உள்ளனர்.

பியூச்சர் குரூப்: இனி வேலைக்கு ஆகாது.. களத்தில் இறங்கிய வங்கிகள்..!

ஐபிஎல்

ஐபிஎல்

கிரிக்கெட் உலகில், உலக கோப்பை போட்டிகளுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு கிரிக்கெட் சீரியஸ் என்றால் அது ஐபிஎல் தான். இந்த நிலையில் கடந்த 5 வருடத்திற்கான ஒளிபரப்பு ஒப்பந்தம் முடிய உள்ள நிலையில் புதிய ஒப்பந்தத்திற்கான ஏலம் துவங்க உள்ளது.

5 வருட ஏலம்

5 வருட ஏலம்

இந்த வாரம் ஐபிஎல் போட்டியின் அடுத்த 5 வருடத்திற்கான ஒளிபரப்பு ஒப்பந்தத்தின் ஏலம் விடுவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட உள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அமேசான் மத்தியில் போட்டி அதிகரிப்பது மட்டும் அல்லாமல் பதற்றத்தையும் அதிகரித்துள்ளது.

 புதிய ஏல முறை
 

புதிய ஏல முறை

முதல் முறையாக ஐபிஎல் நிர்வாகம் கிரிக்கெட் போட்டிகளை ஓளிப்பரப்ப டிவிக்கு தனியாகவும், இணையத்திற்குத் தனியாகவும் ஒப்பந்தத்தை ஏலம் விட முடிவு செய்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் அமேசானுக்கும் ரிலையன்ஸ்-க்கும் மிகப்பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

ரிலையன்ஸ் அமேசான்

ரிலையன்ஸ் அமேசான்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளம் இல்லை, ஆனால் டிவி ஒளிபரப்பு செய்ய டிவி சேனல்கள் உள்ளது. இதேபோல் அமேசான் நிறுவனத்திடம் டிவி சேனல்கள் இல்லை ஆன்லைனில் ஸ்ட்ரீமிங் செய்ய அமேசான் ப்ரைம் சேவை உள்ளது.

 ஸ்டார் நெட்வோர்க், சோனி

ஸ்டார் நெட்வோர்க், சோனி

அமேசான் ரிலையன்ஸ் மத்தியிலான போட்டியில் ஸ்டார் நெட்வோர்க், சோனி போன்ற நிறுவனங்கள் வாய்ப்பை இழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இருநிறுவனங்களும் அதிகப்படியான பண பலத்துடனும், கூட்டணியுடனும் இருக்கும் காரணத்தால் இந்த முறை போட்டி 4 பெரு நிறுவனங்கள் மத்தியில் கடுமையாக இருக்க போகிறது.

 ஐபிஎல்-க்கு ஜாக்பாட்

ஐபிஎல்-க்கு ஜாக்பாட்

இந்த ஏலத்தில் பேஸ்புக், கூகுளின் யூடியூப் போன்ற முன்னணி நிறுவனங்கள் இடம்பெறும் என எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இந்த ஏலத்தில் போட்டி அதிகமாக இருக்கும் காரணத்தால் ஐபிஎல் நிர்வாகத்திற்கு வரலாறு காணாத வகையில் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் விளம்பரத்தின் கட்டணமும் அதிகரிக்கும் என தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Jeff Bezos and Mukesh Ambani fight over IPL media rights

Jeff Bezos and Mukesh Ambani fight over IPL media rights முகேஷ் அம்பானி – ஜெஃப் பெசோஸ் மீண்டும் போட்டி.. ஜாக்பாட் யாருக்கு..?!

Story first published: Thursday, March 31, 2022, 19:05 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.