வீட்டில் இருந்து வேலை செய்யுங்கள்! ஊழியர்களுக்கு பிரதமர் மகிந்த வழங்கியுள்ள அறிவிப்புஎரிபொருளைச் சேமிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் இருந்தே தமது கடமைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் மற்றும் அவரது அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச  பணிப்புரை விடுத்துள்ளார்.

இது குறித்து தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ள பிரதமர், தடையில்லா மின்சாரம் இல்லாத போதிலும், அதிகாரிகள் தங்களால் இயன்றதைச் செய்து வருவதாகக் கூறினார்.

இந்த நெருக்கடியினால் மக்கள் படும் இன்னல்களை அரசாங்கம் என்ற வகையில் நாம் உணர்ந்து கொண்டுள்ளதோடு, அந்த வரம்புகளை போக்குவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.