”அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும்” – கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

‘அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றியது போன்ற நடவடிக்கையை மட்டும் எடுத்தால் போதாது. அவர் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு மதுரையில் 3 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் புதிய மாநில செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாநாட்டில் தற்போதைய அரசியல் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழகத்தில் பாஜக காலூன்றும் முயற்சியை தடுப்பது குறித்து ஆலோசித்தோம். 80 பேர் கொண்ட மாநில குழு தேர்வு செய்யப்பட்டது. அந்த குழுவானது மாநில செயலாளராக என்னையும், மாநில செயற்குழு உறுப்பினர்களாக 15 பேரையும் தேர்வு செய்துள்ளனர். மாநாட்டில் 60-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பாஜக, ஆர்எஸ்எஸ் எங்கெல்லாம் நுழைகிறதோ அங்கெல்லாம் சென்று எல்லா தளத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நுழைந்து அதனை தடுக்க முயல்வோம்.
image
கோவில்களில் பண்பாட்டு அடிப்படையில் நுழையும் வகையில், கோவில் நிர்வாகத்தை அணுகுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுகவின் பாஜக எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக அரசியலில் நட்பு ரீதியாக துணை நிற்போம். மக்களின் வாழ்வாதார பிரச்சனைக்காக போராடுவோம்.
ஆணவப்படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்தில் இன்னும் சாதிய தீண்டாமை உள்ளது. தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன், அதிகாரியிடம் சாதிரீதியாக நடந்துகொண்டது கண்டிக்கதக்கது. ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிக்கே இப்படி என்றால் சாதரண மக்களுக்கு என்ன நிலை உருவாகும் என்ற கவலை உள்ளது.
 முதல்வர் ஸ்டாலின் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களில் பாஜக, ஆர்எஸ்எஸ் மத தீவிரவாத பிரச்சாரத்தை தடுக்கும் வகையில், கோவில் நிர்வாகங்களில் மற்றும் விழாவில் பாஜக தலையிட்டு மத பிரச்சாரம் செய்வதை தடுப்போம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.