அரசு போக்குவரத்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்க உத்தரவு

சென்னை: அரசு போக்குவரத்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. படுக்கை எண் 1LB மற்றும் 4LB ஒதுக்கீடு செய்து இணையத்தில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. பேருந்து புறப்படும் வரை பெண் பயணிகள் எவரும் முன்பதிவு செய்யாதபட்சத்தில் 2 படுக்கைகள் பொது படுக்கையாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.