இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இரண்டு முறை சம்பள உயர்வு..!

இந்திய விமானச் சேவை நிறுவனங்கள் சுமார் 2 வருடத்திற்குப் பின்பும் வெளிநாட்டுச் சேவையைத் துவங்கியுள்ள நிலையில் அனைத்து நிறுவனங்களும் முழு வர்த்தகத்தைத் துவங்கத் தயாராகி வருகிறது.

இதேவேளையில் நாட்டின் முன்னணி விமானச் சேவை நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குச் சிறப்பான சம்பள உயர்வைக் கொடுத்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் இண்டிகோ இந்த வருடத்தில் இரண்டு முறை சம்பள உயர்வை அளிக்க தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இண்டிகோ திடீர் முடிவு.. விமான டிக்கெட் விலை குறையும், ஆனா பேகேஜ் கட்டணம் உயரும்..!

 இண்டிகோ

இண்டிகோ

இண்டிகோ நிறுவனத்தில் விமானச் சேவை முழுவீச்சில் இயங்க துவங்கிய விலையில் இந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரும், நிர்வாகக் குழுவும் பைலட்களும் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 8 சதவீத சம்பள உயர்வை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இப்புதிய சம்பள உயர்வுக்கான அறிக்கையை அடுத்த வாரத்தில் அளிக்க உள்ளதாகவும் இந்நிறுவனத்தின் உயர் துணைத் தலைவரான அஷிம் மித்ரா தெரிவித்துள்ளார். இண்டிகோ நிறுவனத்தில் விமானச் சேவை முழுவீச்சில் இயங்க துவங்கிய விலையில் இந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரும், நிர்வாகக் குழுவும் பைலட்களு வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 8 சதவீத சம்பள உயர்வை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இப்புதிய சம்பள உயர்வுக்கான அறிக்கையை அடுத்த வாரத்தில் அளிக்க உள்ளதாகவும் இந்நிறுவனத்தின் உயர் துணைத் தலைவரான அஷிம் மித்ரா தெரிவித்துள்ளார்.

 2வது சம்பள உயர்வு

2வது சம்பள உயர்வு

இது மட்டும் அல்லாமல் வர்த்தகம் தொடர்ந்து எவ்விதமான தொய்வு அல்லது தடை இல்லாமல் இயங்கினால் கட்டாயம் நவம்பர் 1ஆம் தேதி முதல் 2வது சம்பள உயர்வாக 6.5 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கப்படும் எனவும் அஷிம் மித்ரா தெரிவித்துள்ளார்.

ஸ்பைஸ்ஜெட்
 

ஸ்பைஸ்ஜெட்

இதேபோல் இண்டிகோ நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தனது நிறுவனத்தின் கேப்டன் பதவிகளில் இருக்கும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் சம்பள உயர்வும், பர்ஸ்ட் ஆபீசர்ஸ் பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு 15 சதவீதமும், ட்ரைனர் பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு 20 சதவீத சம்பள உயர்வை அளிக்க உள்ளது.

இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள்

இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள்

ஏப்ரல் 29, 2020ல் கொரோனா தொற்றுக் காரணமாக விமானச் சேவைகள் முடங்கிய நிலையில் இந்நிறுவனத்தின் பைலட்களுக்கு ஏப்ரல் மே மாதம் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது சம்பள உயர்வு அறிவிப்பு மூலம் இண்டிகோ மற்றும் ஸ்பைல்ஜெட் நிறுவன ஊழியர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IndiGo, SpiceJet pilot gets double salary hike this year

IndiGo, SpiceJet pilot gets double salary hike this year இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இரண்டு முறை சம்பள உயர்வு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.