இறுதிகட்டத்தை நோக்கி செம்பருத்தி சீரியல்?

ஜீ தமிழில் ஒளிபரப்பான தொடர்களிலேயே அதிக வரவேற்பு பெற்று, அந்த சேனலுக்கு ஒரு பெரிய அடையாளத்தை கொடுத்தது என்றால் அது செம்பருத்தி தொடர் தான். இதில், கார்த்திக் ராஜ், ஷபானா, ப்ரியா ராமன், ஊர்வம்பு லெட்சுமி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடர் கிட்டத்தட்ட 5 வருடங்களில் 1250 எபிசோடுகள் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த தொடர் தற்போது நிறைவு பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

செம்பருத்தி தொடர் நிறைவு பெற போவதாக வரும் தகவல் முதல் முறை இல்லை. 7 மாதங்களுக்கு முன்பே இந்த தொடர் முடித்து வைத்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம் கதையின் மெயின் லீடாக நடித்து வந்த கார்த்திக் ராஜ் தொடரை விட்டு விலகினார். எனவே, டிஆர்பி மிகப்பெரிய அளவில் அடி வாங்கியது. அதன்பிறகு அக்னி நடிக்க ஆரம்பித்தார். தற்போது தொடரை முடித்து வைக்க தயாரிப்பு மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் சேர்ந்து முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செம்பருத்தி தொடர் மிக விரைவில் முடிவுக்கு வரும் பட்சத்தில், ஜீ தமிழ் புதிதாக மூன்று சீரியல்களை ரிலீஸ் செய்ய உள்ளது. அதில், தவமாய் தவமிருந்து தொடர் செம்பருத்தியின் இடத்தை பிடிக்கும் என எதிபார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.