“எனக்கு எந்த மறதியும் இல்லை'' – ரன்பீர் கபூரின் தகவலை மறுக்கும் ரன்தீர் கபூர்!

ரன்பீர் கபூரின் தந்தை ரிஷி கபூர் 2020 ஏப்ரலில் இரத்தப் புற்றுநோயால் மறைந்தார். அவர் நடித்துக்கொண்டிருந்த கடைசி படமான ‘Sharmaji Namkeen’ படம் பாதியில் நின்றது. பிரபல நடிகரான பரேஷ் ராவல் மீதிப் படத்தை நடித்துக்கொடுக்க, ஹிந்தி சினிமாவில் முதல்முறையாக ஒரே கேரக்டரை இரண்டு நடிகர்கள் நடித்திருப்பது இந்தப் படத்தில்தான். இதற்கான ப்ரோமோஷனில் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர் அளித்திருக்கும் பேட்டியில், ரிஷியின் மூத்த சகோதரரான ரன்தீர் கபூர் டிமினீஷியா எனப்படும் மறதி நோயின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறார் எனச் சொல்லியிருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த ரன்தீர் கபூர், “ரன்பீரின் இஷ்டம். அவன் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். நான் முழுக்க நன்றாக இருக்கிறேன். இப்போது கூட இயக்குனர் ராகுல் ரவெய்ல் உடன் கோவா விழாவுக்குச் சென்று வந்தேன்.” என்று பதில் அளித்திருக்கிறார்.

sharmaji namkeen படத்தில் ஒரே வேடத்தில் ரிஷி கபூர் மற்றும் பரேஷ் ராவல்

முன்னர் ரன்பீர், Sharmaji Namkeen படத்தை, கரீனா கபூரின் அப்பாவும் தன்னுடைய பெரியப்பாவுமான மூத்த நடிகர் ரன்தீர் கபூர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு படத்தைக் காட்டினார். அப்போது படம் முடிந்த பிறகு ரன்தீர் கபூர் தன்னிடம் வந்து ‘அப்பா அசத்தியிருக்கிறார். அவரிடம் சொல். எங்கே இருக்கிறார்’ எனக் கேட்டதாக குறிப்பிட்டு இருந்தார் ரன்பீர். அதனை மறுத்து அப்படி தனக்கு எந்த மறதியும் இல்லை என்கிறார் ரன்தீர். “இந்தப் படம் பாதியில் நின்றபோது ஒரு மகனாக நான் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பினேன். ஆனால் பரேஷ் இந்தப் படத்திற்கு உள்ளே வந்ததும் இந்த ரோலில் நடித்து கொடுத்ததற்காக நான் நன்றியுடையவனாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் உணர்கிறேன்” என ரன்பீர் கபூர் தெரிவித்து இருக்கிறார். இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.